சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் கைது?...உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Arrest of Ministers thngam thennrasu KKSSR in case of accumulation of property Supreme Court hearing today
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர்,
கடந்த 2006-ம் ஆண்டு அமைச்சர்களாக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கினை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதி மன்றம், அமைச்சர்கள் இருவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், அவருடைய மனைவி ஆர்.ஆதிலட்சுமி, அமைச்சர் தங்கம் தென்னரசு, அவருடைய மனைவி டி.மணிமேகலை ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று)விசாரணைக்கு வருகிறது.
English Summary
Arrest of Ministers thngam thennrasu KKSSR in case of accumulation of property Supreme Court hearing today