ராமபிரான் நமக்குள் ஒருபோதும் பகைமையை கற்பிக்கவில்லை-அரவிந்த் கெஜ்ரிவால்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தற்போது குஜராத் தேர்தலில் களமிறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவா அரசியல் குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இந்துத்துவா கொள்கை மூலம் வெற்றி பெற முடிந்ததற்கு அங்கு எதிர்ப்பு ஏதும் இல்லாததே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராமாயணம், பகவத் கீதையில் உள்ள இந்துத்துவாவை தாம் நம்புவதாகவும் ராமாயணத்திலும், கீதையிலும் எது குறிப்பிட்டாலும் அது இந்துத்துவம், ராமாயணத்தில் ராமர் என்ன சொன்னாரோ அது இந்துத்துவம் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

ராமர் நமக்குள் பகைமையை ஒருபோதும் கற்பிக்கவில்லை. ஆனால் உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சியினர் தலித்துகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்றும் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி பெற்றதை தொடர்ந்து குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் குஜராத்தில் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது பிரதமர் மோடியை குறி வைத்து அல்ல என்றும் அவர் தமது பிரதமர் இந்த நாட்டுக்கும் பிரதமர் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arvind Kejriwal believes in the Hindutva principles of the Ramayana Bhagavad Gita


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->