ட்விட்டரில் மோதிக்கொள்ளும் இரு மாநில முதல்வர்கள்.. "இதுக்கு ஒரு எண்டே இல்லையா.?!" நெட்டிசன்கள் விமர்சனம்.!
Assam Cm and Delhi cm fight on twitter
அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக மற்றும் டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத் மீ அரசுகளுக்கு இடையில் அரசு பள்ளி குறித்து மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை அசாம் மாநிலத்தில் 34 பள்ளிகள் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகிறது.
இதை அறிந்த அரவிந்த் கெஜ்ரிவால், "நாடு முழுவதும், அதிக பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பள்ளிகளை மூடுவது தீர்வு அல்ல. கல்வித்துறையில் சிறப்பான பணியை காட்டுங்கள். டெல்லிக்கு வாருங்கள் கல்வித்துறை எப்படி வேலை செய்கிறது என்பதை நான் காட்டுகிறேன். என கூறியிருந்தார்.
இது குறித்து அசாம் முதல்வர், ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள, டிவிட்டர் பதிவில், "உங்கள் அறியாமையை நினைத்து வேதனைப்படுகிறேன். டெல்லியை விட அசாம் 50 மடங்கு பெரியது. உங்களிடம் ஆயிரம் பள்ளிகள் இருக்கிறது. எங்களிடம் 44 ஆயிரத்து 521 பள்ளிகள் இருக்கின்றன."என்று கூறினார்.
மேலும், "அசாமில் இருக்கும்போது உங்களை மருத்துவ கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்கிறேன். ஆயிரம் மடங்கு சிறந்தவை." என்று கூறியிருந்தார். இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் கூறிய கருத்துக்கள் உங்களை புண்படுத்தி விட்டதாக தெரிகிறது. உங்களை குறை சொல்வது எனது நோக்கம் அல்ல. நாம் ஒரே நாடு ஒருவருக்கு ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும்.
அப்பொழுது தான் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாறும். யாராவது எப்போது வரலாம் என்று கேட்டால், உங்களால் எப்போது முடியுமோ அப்போது வாருங்கள். என்று கூறுவது வர வேண்டாம் என்ற அர்த்தத்தை குறிக்கும். நான் அரசு பள்ளிகளை பார்க்க எப்பொழுது வர வேண்டும் என்று தான் கேட்டேன். அதற்கு நீங்கள் பதில் கூறவில்லை." என்று கூறியிருந்தார். இருவரும் மாறி, மாறி விமர்சனம் செய்வதை கண்ட நெட்டிசன்கள் இதற்கு ஒரு எண்டே இல்லையா என வடிவேலு பாணியில் சலித்துக் கொள்கின்றனர்.
English Summary
Assam Cm and Delhi cm fight on twitter