#BREAKING | காங்கிரஸ் தலைவர் பவன் கேரா அதிரடி கைது!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர் பவன் கேராவை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போக்குவரத்துக் காவலில் அசாம் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஹஃப்லாங் காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பவன் கெராவை காவலில் எடுத்து விசாரிக்க அசாம் காவல்துறை குழு டெல்லி புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே, டெல்லி விமான நிலையத்தில் விமானம் மூலம் புறப்பட இருந்த பவன் கெராவை, விமானம் ஏற விடாமல் டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது.


 

காங்கிரஸ் தலைவர் பவன் கெராவை நிறுத்துமாறு அசாம் காவல்துறையினர் கொடுத்த தகவலின் படி தடுத்து நிறுத்தப்பட்டதாக டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.

இந்த அதிரடி கைது சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவிக்கையில், "இன்று நாங்கள் ராய்பூருக்கு காங்கிரஸின் ப்ளீனரி மாநாட்டிற்குப் போகிறோம், எங்கள் சகாவான பவன் கேரா கைது செய்ய போலீசார் வந்தனர்.

கைது வாரண்டைக் காட்டும்படி அவர்களிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் எந்த உத்தரவையும் காட்டவில்லை. இது முற்றிலும் சட்டவிரோதமானது. அசாம் மற்றும் டெல்லி போலீசார் எங்கள் விமானம் ஏற விடாமல் வலுக்கட்டாயமாக நிறுத்தி அவரை கைது செய்துள்ளனர்" என்று ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கைது தொடர்பான மனுவை இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam Police arrests Congress leader Pawan Khera


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->