மணிப்பூரில் பதற்றம் : முதலமைச்சர் கான்வாய் மீது தாக்குதல்..!
Attack on Manipur CMs Convoy
இந்தியாவின் வட கிழக்கில் உள்ளது மணிப்பூர் மாநிலம். இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் பிரைன் சிங். இவர் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தொடர்ந்து ஏழு வருடங்களாக மணிப்பூர் முதலமைச்சராக உள்ளார்.
முன்னதாக மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி என்ற இரு இனத்தைச் சேர்ந்த மக்களிடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மோதல் நிலவி வருகிறது. இவர்களது இந்த மோதலில் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஜிரிபாம் பகுதிக்கு மணிப்பூர் முதலமைச்சர் பிரைன் சிங் வருகை தருவதையொட்டி அவரது பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பாக சென்ற போது திடீரெனெ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதல்வரின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவே அவர்கள் இன்று அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் NH -53 வழியாக கோட்லென் என்ற கிராமத்தின் அருகே இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
முன்னதாக கடந்த 8ம் தேதி சில மர்ம நபர்களால் 2 போலீஸ் அவுட் போஸ்ட்கள் மற்றும் ஒரு அலுவலகம் மற்றும் பல வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அந்த நிகழ்வின் பாதிப்புகள் குறித்து நேரில் பார்வையிடவே முதலமைச்சர் நாளை ஜூன் 11 அப்பகுதிக்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Attack on Manipur CMs Convoy