அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் குடும்பத்தினர் மீது தாக்குதல்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் மற்றும் அவருடைய பேரன் ஆகியோர் நேற்றிரவு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏ.ஜி.ஈஸ் திரையரங்கில் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்க்க வந்துள்ளனர். 

படம் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் அதிக சத்தம் எழுப்பி விசில் அடித்து ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளனர். அதனை அமைச்சர் ராமச்சந்திரனின் பேரன் தட்டி கேட்டுள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென கைகலப்பாக மாறி உள்ளது. இந்த தாக்குதலில் அமைச்சர் ராமச்சந்திரனின் மகன் மற்றும் பேரன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கும்பல் திரையரங்கில் இருந்து உடனடியாக வெளியேறி உள்ளது.

இதனை அடுத்து அமைச்சரின் பேரன் மற்றும் மகன் ரமேஷ் ஆகியோர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தாக்குதல் நடத்திய நபர்கள் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attack on Minister KKSSR Ramachandran family..!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->