இதெல்லாம் அழுத்தம் கொடுக்கிற முயற்சி...! ஆளுநர் செய்வது சரி இல்லை..!!! - தொல்.திருமாவளவன்
attempt put pressure Governor doing not right Thol Thirumavalavan
தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி களமிறங்கியுள்ளார்.இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில், இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

தொல்.திருமாவளவன்:
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்ததாவது,"ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி.
தமிழக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக நினைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு யார் காரணமாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதலுக்கு அமித்ஷா பொறுப்பேற்க வி.சி.க. தெரிவித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது.மேலும், மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய அமைச்சர் சிவராஜ் பட்டேல் பதவி விலகினார் " எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது இணையத்தில் மக்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
attempt put pressure Governor doing not right Thol Thirumavalavan