அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாள் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal



வரும் 2024 ஜனவரி 1 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் என்று. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு முன் ராமர் கோயில் திறப்பு என்பது, மத்தியில் ஆளும் பாஜகவிற்கு ஒரு மைல்கல்லாக அமையும்.

இந்த நிலையில், இன்று திரிபுராவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவிக்கையில், "2024 ஜனவரி 1 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும்" என்று அமித் ஷா தெரிவித்தார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கோயில் கட்டும் பணியைத் தொடங்கி வாய்த்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயில் கட்டும் பணி பாதி முடிந்துவிட்டதாக , உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayothi ramar temple opening day announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->