ஆழியாற்றிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் - பாஜக.!
azhiyar uttanchathiram water line issue
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தின் ஆழியாற்றிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று, பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "பி.ஏ.பி(PAP) பாசனத்திட்டத்தில் பாசனவசதியின்றி கடைமடை காய்ந்து கிடக்கும்போது, திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஏற்கனவே காவிரியாற்றிலிருந்து போதுமான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரத்திற்கு மாற்று குடிநீர் ஏற்பாட்டிற்கு வேறு பல திட்டங்கள் மூலம் குடிநீர் பெற வாய்ப்பிருந்தும் ஏற்கனவே கடும் பஞ்சத்திலிருக்கும் ஆழியாற்றிலிருந்து குடிநீர் என்ற பெயரில் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டு அதை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த திட்டமிடுவதாக விவசாயிகளின் சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை தமிழக முதல்வருக்கு உள்ளது.
எனவே இதுதொடர்பாக பி.ஏ.பி(PAP) ஆயத்திட்ட விவசாயிகள்,பாசன விவசாய பொறுப்பாளர்கள், பாசனசபை பொறுப்பாளர்கள், ஆர்வலர்கள், விவசாயசங்க நிர்வாகிகள், கிராம மக்கள் என் அனைவரும் கலந்துகொண்டு பரம்பிக்குளம்-ஆழியாறு பாதுகாப்பு இயக்க சார்பில் திருப்பூரில் 21.08.2022 காலை 10 மணிக்கு நடைபெறும் மாபெரும் கோரிக்கை பேரணிக்கு பாஜக ஆதரவளிக்கிறது.
அப்பேரணிக்கு பாஜக விவசாய அணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவளிப்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
azhiyar uttanchathiram water line issue