ஏன் பேசுறீங்க இப்படி? ஒரு நாளைக்கு இருமுறை - நிபந்தனையுடன் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்.!
bail issue to kanal kannan hc order
இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், கடந்த மாதம் 1ஆம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், "ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்" என்று பேசி இருந்தார்.
இவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கனல் கண்ணனை கைது செய்தனர். இதற்கிடையே, ஜாமீன் கோரி சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதற்க்கு காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, ஜாமீன் கூறி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி இளந்திரையன், "ஒரு அமைப்பில் இருக்கும்போது, மாற்றுக் கருத்து கொண்டவர்களை குறித்து ஏன் பேச வேண்டும்" என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரி முன் 4 வாரங்களுக்கு இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary
bail issue to kanal kannan hc order