இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார் வங்கதேச பிரதமர்..! - Seithipunal
Seithipunal



நமது அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேச நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். அவர் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இன்று பிற்பகல் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

அவரை இந்திய அரசின் சார்பில்  இந்தியாவின் வெளியுறவுத் துறை இணை மந்திரியான கீர்த்தி வரதன் சிங் வரவேற்றார். இதையடுத்து வங்கதேச பிரதமர் இன்று மாலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கரை சந்தித்து பேசவுள்ளார்.

இதையடுத்து நாளை (ஜூன் 22) காலை வங்கதேச பிரதமர் , நமது பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு குறித்தும், மேலும் இரு நாடுகளின் கடல் எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நாளை மாலை அவரது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வங்கதேசம் திரும்பவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஜூன் 9ம் தேதி பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh PM Visited to India As Two Days Visit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->