சட்டப்பேரவை முற்றுகை: போலீசார் தாக்குதலில் படுகாயமடைந்த காங்கிரஸ் கட்சியினர்! - Seithipunal
Seithipunal


பீகார் மாநில அரசை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சியினர், அம்மாநிலம் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பீகார் மாநிலத்தில் அதிகரித்து வரும் தொடர் குற்றங்கள், அக்னி வீரர் திட்டம் தொடர்பான பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் என்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிகார் மாநில சட்டப்பேரவையை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸ் தலைவர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் விதமாக போலீசார் அவர்கள் மீது தண்ணீர் பீச்சி கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அதையும் தாண்டி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் முன்னேறி வந்ததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சிக்கவே, இதில் பல தொண்டர்களுக்கு அடி விழுந்தது.

பிகார் மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றதால் போலீஸார் தடியடி நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி தனது X தளப் பக்கத்தில், அதிகரிக்கும் குற்றங்கள், பணவீக்கம், வேலையின்மை மற்றும் நீட் முறைகேட்டால் பிகார் மக்கள் சிரமப்பட்டாலும், அம்மாநில அரசு பொய் சொல்லி வருவதாக தெரிவித்துள்ளது..
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhihar Police attack Congress members


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->