சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - பிகார் முதல்வர் பரபரப்பு பேட்டி!
Bihar CM Community vice census
சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று, பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், மத்திய அரசு தரப்பில் அதற்க்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி வருகிறது.
இந்நிலையில், பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு (EWS) கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு குறித்து பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவிக்கையில், "உச்சநீதிமன்ற தீர்ப்பு முற்றிலும் சரி. ஆனால் சாதி அடிப்படையில் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
விரைவில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நாங்கள் தொடங்க உள்ளோம். இது மக்களின் பொருளாதார நிலையையும், அவர்களுக்கான சிறந்த திட்டங்களை வழங்க வழிவகை செய்யும்.
இது மட்டும் நடந்தால் தற்போது இருக்கும் 50%இட ஒதுக்கீடு இன்னும் அதிகமாகும். சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்" என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
English Summary
Bihar CM Community vice census