ராகுல்காந்தி பேச்சால் ரூ.250 நஷ்டம்! நீதிமன்றத்தை நாடிய நபரால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ராகுல் காந்தியின் பேச்சை கேட்டதால் ரூ.250 நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, இழப்பீட்டை பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வாரம், காங்கிரசின் தலைமை அலுவலக திறப்பு விழாவில் ராகுல் காந்தி கூறிய கருத்துகள் விவாதத்துக்குள்ளாகின. “பாஜக, ஆர்.எஸ்.எஸ் மட்டுமன்றி இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம்” என்று ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் சௌத்ரி என்ற நபர், “ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்ட போது அதிர்ச்சி அடைந்து, கையில் வைத்திருந்த 5 லிட்டர் பாலைக் கொட்டிவிட்டேன். பாலின் லிட்டருக்கு ரூ.50 என்ற விலையால் எனக்கு ரூ.250 நஷ்டம் ஏற்பட்டது. ராகுல் காந்தி நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளார்” என்று புகார் அளித்துள்ளார்.

மேலும், முகேஷ் சௌத்ரி, ரோசெரா மண்டல சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரின் அந்த மனுவில், பாரதீய நியாய சம்ஹிதா சட்டத்தின் 152-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிய கோரியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar Milk Sale man Congress Rahulgandhi BJP RSS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->