கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - எப்போது தெரியுமா?
local holiday to krishnagiri district
தமிழகத்தில் அரசு விடுமுறை மற்றும் பொது விடுமுறை அல்லாத நாட்களில் வரும் சில முக்கியமான நாட்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே உள்ளூர் விடுமுறை அளித்துக் கொள்ளலாம். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓசூர் மலைக்கோட்டை என்று அழைக்கப்படும் சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான தேரோட்டம் மார்ச் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நான்கு தாலுகாவை சேர்ந்த பள்ளி, கல்லூரிகள் மட்டும் அரசு அலுவலகங்களுக்கு மார்ச் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, மார்ச் 22ஆம் தேதியான சனிக்கிழமை அன்று வேலைநாளாக செயல்படும் என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
local holiday to krishnagiri district