வங்கக் கடலில் நிலநடுக்கம் - ஒரே நாளில் 2 முறை ஏற்பட்ட சம்பவம்.!
earthquake in bay of bengal
வங்கக்கடலில் இன்று காலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 11.12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்தத் தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.95 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.41 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என்று முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கக்கடலில் இரண்டாவது முறையாக 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 3.32 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 7.21 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என்று முதலில் தீர்மானிக்கப்பட்டது.
English Summary
earthquake in bay of bengal