ராஜினாமா செய்தது ஏன்? பிஹார் முதலமைச்சர் பரபரப்பு பேட்டி.! அதிர்ச்சியில் பாஜக தலைமை.! - Seithipunal
Seithipunal


243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில், கடந்த சட்டமன்ற தேர்தலில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 இடங்களும், பா.ஜனதாவுக்கு 77 இடங்களும் கிடைத்தது. 

அதிக இடங்களில் பாஜக வென்றாலும், தேர்தல் ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆனார். கூட்டணி ஆட்சி நன்றாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு அதிக இடம், 2024 பாராளுமன்ற தேர்தலுடன் பீகார் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிதிஷ்குமார் முன்வைத்தார். 

இதற்க்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவே, பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் விரிசல் விழுந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று பேசியதாக தகவல் வெளியாகின.

மேலும், அம்மாநில எதிர்கட்சிகளான காங்கிரஸ், கம்னியூஸ்ட் உடன் முதல்வர் நிதிஷ் குமார் கூட்டணிவைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின. 

இந்நிலையில், இன்று பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அளுநர் பாகு செளகானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார். 

ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின் நிதிஷ் குமார் அளித்துள்ள பேட்டியில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஒருமித்த கருத்து" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar Politicsnitish


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->