ஓபிஎஸ் சந்தித்துவரும் பாஜக நிர்வாகிகள்! அடுத்து அதனா?! அண்ணாமலை கூட...,! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட, தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்து வருவது, பல யூகங்களுக்கு வித்துட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் கடந்த மாதம் 24 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 

அந்த நேரத்தில் அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தின் முக்கியமான வழக்காக கருதப்பட்ட பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி இருந்தது.

அந்த தீர்ப்பு அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட முடிவாகிவிட்டார் என்பதையே காட்டியுள்ளது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும் அதையே உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதன் காரணமாக கட்சியில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தின் தாயாரின் மறைவுக்கு அதிமுகவின் நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் இரங்கல் கூட தெரிவிக்காமல் தவித்தனர்.

அதே சமயத்தில் பாஜக உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தேனியை சுற்றி உள்ள மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது இரங்கலை, ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தொடர்ந்து ஓ பன்னீர்செல்வத்தை பாஜக நிர்வாகிகள் வரிசைகட்டி சந்தித்து வருவது அதற்கு வித்துட்டு உள்ளது.

மேலும் ஒரு திருப்பமாக இன்று மாலை சுமார் ஆறு மணி அளவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஓ பன்னீர்செல்வத்தை அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்து தனது இரங்கலை தெரிவித்து, அவருக்கு ஆறுதல் கூறியிருப்பது அரசியல் விமர்சகர்களின் கருத்துகளுக்கு அச்சாணி போட்டது போல் அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai And BJP members meet to OPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->