பாஜக அண்ணாமலை வெளியிட்ட இரண்டாவது ஆடியோ! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி, இரண்டாவது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆடியோவில், "ஒரு நபர் - ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு அளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான்.

கட்சியையும், மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருந்திருக்க வேண்டும் தான் அல்லவா? ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர். 

நிதி மேலாண்மை செய்வது சுலபம். இது ஒரு அமைப்பா..? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்.

முதல்வரின் மகனும், மருமகனும் தான் கட்சியே! அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள்...., அதனால் 8 மாதங்கள் பார்த்த பிறகு முடிவு செய்து விட்டேன். இது ஒரு நிலையான முறை கிடையாது. 

எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால், இப்போது நான் விலகினால், இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால், அவர்கள் செய்த அனைத்தும் எதிர்வினையாக அவர்களுக்கு திருப்பி அடிக்கும்.

எப்படி சொல்வது....., நான் இந்த யுத்தத்தை மிகச் சீக்கிரமாக கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என கருதுகிறேன். நான் அந்த பதவியில் இல்லாத போது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய கவலை எனக்கு இல்லை" என்று ஆடியோ முடிவடைகிறது.

மேலும், "திமுக மற்றும் பாஜக இடையே சரியான வேறுபாட்டைக் காட்டிய தமிழக நிதியமைச்சருக்கு சிறப்பு நன்றி" என்று அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai release second video


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->