வரும் நாடாளுமன்றத் தேர்தல் படிப்புக்கும், குடிக்குமான தேர்தல் - பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபெற மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சிவகாசி சட்டமன்ற தொகுதிகள் நடைபயணம் மேற்கொண்ட போது அவர் பொதுமக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது பேசிய அவர், சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க சீன பட்டாசுகளுக்கு தடை விதித்தது மோடி அரசு. அதேபோல் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க சீனாவில் இருந்து இறக்குமதியாகும் லைட்டருக்கு தடை செய்தது மத்திய அரசு. பட்டாசு தொழிலுக்கு உண்டான உச்ச நீதிமன்ற வழக்கில் விரைவாக தடை இல்லாத தீபாவளி ஆண்டவர் நிரந்தர தீர்வு காணப்படும்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இல்லாவிட்டால் சிவகாசி பட்டாசு தொழில் வளர்ந்து இருக்காது. சீன பட்டாசு இறக்குமதியாகியே உச்ச நீதிமன்றத்தில் சிவகாசி பட்டாசு தடை வந்து இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு அடித்தளமிட்டவர் முன்னாள் முதல்வர் காமராஜர் தற்போது ஸ்டிக்கர் அரசாக திமுக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 உறுப்பினர்களுடன் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும். சோழர் கால செங்கோலை பாராளுமன்ற மைய மண்டபத்தில் வைத்து பெருமைப்படுத்தியவர் நரேந்திர மோடி என பேசி உள்ளார்.

மேலும் இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. 40% மது அறைகளை திமுகவில் தான் நடத்துகின்றனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் படிப்புக்கும், குடிக்குமான தேர்தல். திராவிட மாடல் ஆட்சியா? தேசிய மாடல் ஆட்சியா? சாமானிய அரசியலா வாரிசு அரசியலா? என்பதற்கான தேர்தல் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP annamalai roasted DMK in Sivakasi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->