அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம் - பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒன்று சேராததே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் என தமிழக பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதில் அதிமுக பாஜக கூட்டணி தோல்வி குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு அதிமுக ஒன்று சேராததே காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் யார் நிற்க வேண்டும் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் பல சிக்கல்கள் எழுந்தது.

 அதுமட்டுமில்லாமல் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டுமா அல்லது சுயேட்சையாக போட்டியிட வேண்டுமா என்பதிலும் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. இந்த பிரச்சனைகளும் குழப்பமும் தான் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் வலிமையுடன் போட்டியிட வேண்டுமென பாஜக அப்போதிலிருந்து கூறியது. பிரிந்து நிற்பதோ அல்லது இருவர் போட்டியிடுவதோ கூடாது என்று பாஜக வலியுறுத்தியது இதை சொன்னதற்காக சிலர் எங்கள் மீது கோபப்பட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai speech about erode by election defeat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->