பொதுமக்களுக்கு காசு கொடுத்து வாக்கு கேட்பது புற்றுநோய் போன்றது - பாஜக அண்ணாமலை.!
BJP Annamalai speech about Erode East by election
கோவை நவக்கரை பகுதியில் பாஜக சார்பில் விவசாயிகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அதை பின்னர் செய்திகளை சந்தித்து பேசிய அவர், மக்களுக்கு காசு கொடுத்து வாக்கு கேட்பது புற்றுநோய் போன்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுமார் 500க்கும் மேற்பட்ட தேர்தல் விதிமுறை வழக்குகள் பதிவாகியுள்ளது. சுமார் ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு நாம் இதுபோன்ற அநாகரீக அரசியலை ஏற்றுக் கொள்ளப் போகிறோம் என கூறியுள்ளார்.
மேலும், இது போன்ற அநாகரீக அரசியலால் தான் நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டதாக கூறியுள்ளார். ஒரு தேர்தலுக்கு சாதாரணமாக 45 கோடி செலவாகிறது என்றும் ஆனால் ஆளுங்கட்சிக்கு 250 கோடி வரை செலவாகும் என விமர்சித்துள்ளார்.
அரவக்குறிச்சி தேர்தல் போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் மாறிவிட்டதாக குற்றம் சாட்டிய அவர் காசு கொடுத்து பெரும் வெற்றி தேவையா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசியல் கட்சியினரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் நல்லவர்கள் அரசியலை விட்டு விலகி விடுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai speech about Erode East by election