திமுக அரசின் சர்வாதிகார ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் - பாஜக அண்ணாமலை.!
BJP Annamalai tweeted about kovai BJP leader arrested
திமுக அரசின் சர்வாதிகார ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் தமிழக பாஜக தலைவர் பாஜக அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி அவர்களை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அந்த பதிவில் "இந்துக்களை தொடர்ச்சியாக இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் ஆ.ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி அவர்களை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
BJP Annamalai tweeted about kovai BJP leader arrested