மதத்தின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபடுவதை உதயநிதி கண்டிப்பாரா? வெளுத்து வாங்கிய பாஜக தரப்பு!!
bjp ask Will Udayanidhi condemn terrorism in name of religion
பாகிஸ்தானில் நம் நாட்டு வீரர்களை கற்களால் அடித்த நிகழ்வுகள் உதயநிதிக்கு தெரியுமா?
திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "இந்தியா விருந்தோம்பலுக்கு புகழ்பெற்றது. ஆனால் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உபசரிப்பு ஏற்க முடியாது. விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டுமே தவிர வெறுப்பை பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது" என தனது கருத்தை தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து பலர் ஜெய் ஸ்ரீ ராம் கோசம் எழுப்பியதற்கு தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு பாஜக மணிலா துணைத்தலைவர் நாராயணன் தனது டிவீட்டர் பக்கத்தில் "ஜெய் ஸ்ரீராம்' - என்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இருந்த ரசிகர்கள் சொன்னது தவறானது, வெறுப்பானது என்றெல்லாம் கூறியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். ராம ராஜ்ஜியம் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் கனவும் கூட ரசிகர்களின், மக்களின் நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிக்க தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது தான்.
பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்லும் போது அந்த நாட்டில் உள்ள ரசிகர்கள் நம் நாட்டு விளையாட்டு வீரர்களை எப்படியெல்லாம் இழிவாக தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்கள் என்பது உதயநிதிக்கு தெரியுமா? பாகிஸ்தானில் நம் நாட்டு வீரர்களை கற்களால் அடித்த நிகழ்வுகள் உதயநிதிக்கு தெரியுமா? மற்றொரு நாட்டில், உன் அப்பா பெயர் என்ன? என்று நம் நாட்டு வீரர்களை என்று ரசிகர்கள் கேட்டபோது உதயநிதி எங்கிருந்தார்?
நாசகார செயல்களில் ஈடுபடும் ஹமாஸ், ஐ எஸ் உள்ளிட்ட நம் நாட்டில் உள்ள இதர பயங்கரவாத இயக்கத்தினர் கூட அழிவுகளை ஏற்படுத்தும் போது ,'அல்லாஹு-அக்பர்' என்று சொல்வதை, அதாவது இறைவனே மிகப் பெரியவன் என்று சொல்வதை உதயநிதி கேள்விப்பட்டிருக்கிறாரா? அது தவறில்லையா? ஒரு மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபடுவதை உதயநிதி கண்டிப்பாரா?
ரசிகர்கள் தங்களுக்கு எது உற்சாகத்தை கொடுக்குமோ அந்த கோஷங்களை எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் உரிமையில் தலையிட உதயநிதி யார்? அந்த ரசிகர்கள் மற்றொரு மதத்தை புண்படுத்தி பேசியிருந்தால் கண்டிப்பதில் நியாயம் உள்ளது.
கோவையில் 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை 'முஸ்லிம்' கைதிகள் என்று மத ரீதியாக அடையாளப்படுத்தி பேசுபவர்கள், தங்களின் அணி வெற்றி பெற்றதை கொண்டாடுவதற்கு தங்களின் கடவுளை 'ஜெய் ஸ்ரீராம்' என்று போற்றி பாடுவதை கண்டிப்பதற்கு தகுதியில்லை. விளையாட்டு அமைச்சர் விளையாட்டில் கவனம் செலுத்தட்டும். மக்களின் நம்பிக்கைகளில் விளையாட வேண்டாம்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
bjp ask Will Udayanidhi condemn terrorism in name of religion