பாஜகவின் தமிழக புள்ளிக்கு பிடிவாரண்டு! வரதட்சணை தொடர்பான வழக்கில் அதிரடி!
BJP Coimbatore AP Muruganadam
வரதட்சணை தொடர்பான வழக்கில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
வருகிற 27 ஆம் தேதி அவர் ஆஜராக காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கின் பின்னணியை பொறுத்தவரை;
கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், முருகானந்தம் பல முறை விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, 2014 ஆம் ஆண்டு ஞான செளந்தரியை திருமணம் செய்த முருகானந்தம், 1.5 ஏக்கர் நிலம், 60 சவரன் நகை, மற்றும் ₹10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருமணத்திற்கு சில மாதங்களின் பின்னர் ஞான செளந்தரி உயிரிழந்த நிலையில், இவருடைய தந்தை சீர்வரிசைப் பொருட்களை திரும்பக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், ஏ.பி. முருகானந்தத்திற்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
English Summary
BJP Coimbatore AP Muruganadam