தகுதி இல்லாத நிதியமைச்சர்.. நிச்சயம் ஸ்டாலின் வருத்தப்படுவார்.. பி.டி.ஆருக்கு பாஜக வக்காலத்து..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் குறித்து தமிழ்நாடு நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இரண்டு முறை நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார். மேலும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்தும் தன்னிலை விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரம் காலமாக தமிழக அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

அதன்படி நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பரிந்துரையின்படி தமிழக அமைச்சரவையில் டி.ஆர்.பி ராஜா அமைச்சராகவும் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கியும் பரிந்துரை செய்ததற்கு தமிழக ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கினார்.

இந்த நிலையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உட்பட சில முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று புதிதாக அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்ட டி.ஆர்.பி ராஜாவுக்கு தொழிற்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் செய்தி தொடர்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றியதற்கு தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழக அரசின் நிதி மேலாண்மையை திறம்பட நிர்வகிக்க தவறி விட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையெனில், 30,000 கோடி விவகாரம் உண்மை தான் என்று மக்கள் உறுதியாக நம்புவார்கள். தகுதியில்லாத ஒரு நபரை நிதியமைச்சராக நியமித்ததற்கு முதல்வர் வருத்தம் தெரிவிப்பாரா? அலல்து தகுதியுள்ள ஒரு நபரின் வாக்குமூலத்தை தவறென்று சொல்வாரா?" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP criticizes TN finance minister change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->