அதிமுக விவகாரத்தில் கப்சிப்-னு இருங்க! பாஜகவினருக்கு அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைவர்கள் மற்றும் அதிமுக குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவர் அதனை தொடர்ந்து அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டை மட்டம் தட்டும் வகையில் விமர்சனம் செய்து பேசி இருந்தார்.

இதனால் அண்ணாமலை மீது அதற்கு நிரந்த அதிமுகவினரை எரிச்சலூட்டும் வகையில் தனது என் மண் என் மக்கள் நடை பயணத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அண்ணாமலை தனது கருத்தை திரும்ப பெற முடியாது என திட்டமாக தெரிவித்தார்.

இதனால் அதிமுக தரப்புக்கும் தமிழக பாஜக தரப்புக்கும் இடையே இருந்த உரசல் போக்கு பூதாகரமாக வெடித்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இல்லை என அறிவித்ததோடு இது அதிமுக தலைமையின் முடிவு என திட்டவட்டமாக உறுதிப்படுத்த தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் டெல்லி பாஜக தலைமை அதிமுக தரப்பை பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு அதிமுக சார்பில் மூத்த நிர்வாகிகளான கே.பி முனுசாமி, எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினர்.

இதனை அடுத்து நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்கு சமூக வலைதளங்களில் பாஜக நிர்வாகிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி முடிவு குறித்து எந்த ஒரு கருத்தும் சமூக வலைதளத்திலும் பொது வெளியில் பேசக்கூடாது என தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தொலைபேசி மூலம் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய தலைமை மற்றும் மாநில தலைமைகளுக்கு முடிவுகளுக்கு பாஜக தொண்டர்கள் கட்டப்பட்ட செயல்படுவதோடு பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என கேசவ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். கூட்டணி விவகாரத்தில் அதிமுக தனது நிலைப்பாட்டை அதிரடியாக அறிவித்த நிலையில் பாஜக தொண்டர்களை அமைதி காக்குமாறு அறிவுறுத்தி இருப்பதால் அதிமுகவுடன் பாஜக தேசிய தலைமை சமாதான பேச்சு வார்த்தைகள் ஈடுபடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP directed cadres do not talk about AIADMK decision in public


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->