தனி கட்சி தொடங்கினார் முன்னாள் அமைச்சர்..!! பாஜகவுக்கு பெரும் பின்னடைவு..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் இருந்தபோது சுரங்க முறை கேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2011ல் அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்து கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜனார்த்தன ரெட்டி மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் ஜனார்த்தன ரெட்டி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. பின்னர் தனது முழு நேர அரசியலில் இருந்து ஜனார்த்தன ரெட்டி ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் புதிய கட்சி ஆரம்பிப்பார் என பரவலாக பேசப்பட்டது.

இதன் மூலம் ஜனார்த்தன ரெட்டி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது. அதை உறுதி செய்யும் வகையில் ஜனார்த்தன ரெட்டி தற்போது புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். கல்யாண ராஜ்ஜிய பிரகதி பாக்ஷா என ஜனார்த்தன ரெட்டியின் அரசியல் கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் அமைச்சர் தனி கட்சி ஆரம்பித்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Exminister janarthana reddy started new party Karnataka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->