ஆளுநரை சந்தித்த கையோடு அதிமுகவை அலறவிட்ட எச்.ராஜா! பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் குறித்து பயில்வதற்காக லண்டனுக்கு மூன்று மாதம் பயணம் மேற்கொண்டுள்ளார். 

ஏற்கனவே அண்ணாமலையின் லண்டன் படிப்பு உறுதியான நிலையில், இந்த மூன்று மாத இடைவெளியில் தமிழ்நாடு பாஜகவின் தற்காலிக மாநில தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் அல்லது வானதி சீனிவாசன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பாஜகவின் டெல்லி தலைமை, அண்ணாமலை வரும் வரை கட்சிப் பணிகளை கவனிக்க எச். ராஜா தலைமைகள் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில், இன்று கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என் ரவியை, எச். ராஜா நேரில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா தெரிவிக்கையில், "மரியாதை நிமிர்த்தமாக ஆளுநரை என்ற சந்தித்தேன். அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு ஊழல் வாதி என்ற சான்றிதழ் அளித்ததுடன், திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார். 

திமுக ஆட்சிக்கு வந்தது அவர் சிறைக்கும் சென்று விட்டார். இப்போது செந்தில்பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. 

அதிமுகவினர் எதை பேசினாலும் யோசித்துப் பேச வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவுக்கு எம்டியா இல்லை சேர்மேனா? 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, நான் பாஜகவில் அரசியல் செய்து வருகிறேன். எடப்பாடி பழனிச்சாமி எனக்கு நண்பர் இல்லை என்று நான் சொல்லவில்லை. 

அவர் எப்போதும் நண்பர் தான். எங்களுடைய நிகழ்ச்சிகளுக்கு அனைத்து கட்சி நிர்வாகிகளும் வருவார்கள். அனைவர் மீதும் எங்களுக்கு மரியாதை உள்ளது" என்று எச்.ராஜா தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP H Raja say about DMK ADMK EPS MKStalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->