வாழைப்பழத்தில் அல்வா செய்யலாமா? இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
how to make banana halwa
வாழைப்பழத்தில் அல்வா தயார் செய்யும் முறை குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருள்கள்:-
வாழைப்பழங்கள்
சர்க்கரை
நெய்
ஏலக்காய் தூள்
பாதாம்
செய்முறை:-
* வாழைப்பழங்களை, மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி சூடாக்கி அதில் மசித்த வாழைப்பழங்களைச் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் சர்க்கரையைச் சேர்த்து கரையும் வரை தொடர்ந்து கிளற வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான வாழைப்பழம் அல்வா தயார்.