வடகிழக்கின் 2 தொகுதியிலும் பாஜக அமோக வெற்றி! மண்ணை கவ்வியது I.N.D.I.A கூட்டணி.!! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி 6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணி முடிக்கப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

திரிபுரா மாநிலம் போக்ஸாநகர் தொகுதி:

இந்த தொகுதியில் தபால் வாக்குகள் உட்பட 38,814 வாக்குகள் பதிவான நிலையில் 6 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் பதிவான 38,814 வாக்குகளில் 34, 146 வாக்கு பெற்று பாஜக வேட்பாளர் தபாஜால் உசேன் வெற்றி பெற்றுள்ளார். இவர் பதிவான மொத்த வாக்குகளில் 87.97% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நிசான் உசேன் வெறும் 3,909 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் 10.07% மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் பாஜக இந்த தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

திரிபுரா மாநிலம் தான்பூர் தொகுதி:

 இந்த தொகுதியில் தபால் வாக்குகள் உட்பட 42,666 வாக்குகள் பதிவான நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிந்து தீப்நாத் 30,017 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் பதிவான மொத்த வாக்குகளில் 70.35% வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கௌஷிச் சந்தா வெறும் 11,146 வாக்குகள் மட்டுமே பெற்று 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இவர் மொத்தம் பதிவான வாக்குகளில் 26.12% மட்டுமே பெற்றுள்ளார். 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அரங்கேறிய கலவரம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொடுமையின் காரணமாக பாஜக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பின்னடைவு சந்திக்கும் என எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வடகிழக்கு மாநில மாநாடு திரிபுராவில் நடந்த இரண்டு சட்டமன்ற தொகுதி கால இடைத்தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பது எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களை பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP has won the Tripura assembly byelection


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->