மத்தியபிரதேசத்தில் ஒரு மணி நேரத்தில் லட்சம் வாக்குகளை தட்டித் தூக்கிய பாஜக! - Seithipunal
Seithipunal



18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. இன்று மாலை 6 மணிக்குள் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்று தெரிந்து விடும். இந்நிலையில் இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்கர் லால் வாணி தொடக்கம் முதலே வாக்கு எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் சங்கர் லால் வாணி ஒரு லட்சம் வாக்குகளைக் கடந்து அசத்தியுள்ளார். காலை 9.30 மணி நிலவரப்படி 1 லட்சத்து 9 ஆயிரத்து 56 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் சங்கர் லால் வாணி.

இதற்கடுத்து நோட்டா தான் 16 ஆயிரத்து 480 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மொத்தமே 3000 வாக்குகள் தான் பெற்றுள்ளார். இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளரைத் தவிர அனைவரும் டெபாசிட் இழந்து விட்டதாகத் தெரிகிறது. 

முன்னதாக மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டிபம் என்பவர் தனது வேட்புமனுவை திரும்ப பெற்று பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு காங்கிரஸ் சார்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்த மேலும் இரண்டு வேட்பாளர்களின் மனுவும் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அத்தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது கவனிக்கத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Holds 1 Lakh Votes in an Hour in Indore


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->