காங்கிரஸ் அரசுக்கு பாஜக தொந்தரவு - முதல்வர் சித்தராமையா வேதனை!
BJP is bothering the Congress government - Chief Minister Siddaramaiah!
பெங்களூரு: கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவர் மூலமாக காங்கிரஸ் அரசுக்கு பாஜக தொந்தரவு கொடுப்பதகாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை சமீபத்தில் மைசூரு மேம்பாட்டு கழகம் கையகப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவியிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, தற்போது வழங்கப்பட்டுள்ள மாற்று நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதியளித்ததால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி உள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்ததாவது, எனது 40 ஆண்டு அரசியல் வாழ்வில் இதுவரை எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபட்டதில்லை. எனது முதலமைச்சர் பதவியை வைத்து எந்த ஊழலும் செய்ததில்லை. ஆனால் பாஜகவும், மஜதவும் சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர்.
மேலும், என் மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆதாரம் இல்லாத போதும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் என் மீது வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவரின் இந்த முடிவின் பின்னணியில் பாஜக மேலிடத்தின் அழுத்தம் இருக்கிறது என முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தொந்தரவு தர வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. என் மீது எந்த தவறும் இல்லாததால் நான் முதலமைச்சர் பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்ய போவதில்லை. எனது பதவிக்காலம் முழுவதும் நானே முதலமைச்சராக தொடர்வேன். என் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வாறு முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
English Summary
BJP is bothering the Congress government - Chief Minister Siddaramaiah!