தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறுவது உறுதி - அமித்ஷா!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டம் வாக்குப் பதிவும் மே 13ஆம் தேதி நான்காம் கட்ட மக்களவை தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் ஆங்கில நாளிதழ்க்கு பேட்டி அளித்தார். பேட்டியில் பேசுகையில்,

2014 ஆண்டு மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்க்காக எங்களை ஆட்சியில் அமர்ந்தினர். தற்போது, 2024 நாங்கள் செய்த சாதனைக்காக மக்கள் மீண்டும் எங்களை ஆட்சியில் அமர்த்த உள்ளனர். 400க்கு மேற்பட்ட இடங்களில் வென்று பிரதமர் மோடி பெருபான்மையுடன் ஆட்சி அமைப்பார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 தென்மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக அதிக இடங்களை கைப்பற்றும். தென்மாநிலங்களில் தனித்த பெரிய கட்சியாக வெற்றி பெறுவது உறுதி என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP is sure to win in Tamil Nadu AmithShah


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->