பாஜக பிரமுகர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து.. ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தீவிர பாஜக ஆதரவாளர். மேலும் பிரதமர் மோடியின் மீதான பற்றால் தனது பெயரை மோடி பிரபாகரன் என மாற்றிக் கொண்டுள்ளார்.

இவர் திருப்புவனம் பாஜக ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று தனது காரில் மானாமதுரையில் இருந்து 4 வழி சாலை வழியாக திருப்புவனம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கொத்தங்குளம் விலக்கு இடத்தின் அருகே கார் வந்து கொண்டிருந்த போது, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிள் சென்ற திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்துக்குள்ளான காரை கைப்பற்றி மோடி பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader's car crashes sivagangai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->