சனாதான தர்ம சர்ச்சை! பின்னணியில் மு.க ஸ்டாலின்? டெல்லி பாஜகவின் பரபரப்பு கடிதம்!
BJP letter to MKStalin regarding Udhayanidhi comment on SanatanaDharma
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா போன்று சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
புதிய சாலையில் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்த நிலையில் டெல்லி காவல் நிலையத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரால் 4 பிரிவுகளின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியதில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.
மேலும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நாட்டு மக்களிடம் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் சனாதானம் தொடர்பான தன் கருத்துக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்.
உதயநிதி தன் கருத்தை திரும்ப பெறாவிட்டால், இதற்கு பின்னால் முதலமைச்சராகிய நீங்களும் உள்ளீர்கள் என்று அர்த்தம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக பரபரப்பான கடிதம் எழுதியுள்ளது. ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை எனவும், நான் கூறிய கருத்து சரியானது எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP letter to MKStalin regarding Udhayanidhi comment on SanatanaDharma