அண்ணாமலையின் அடேங்கப்பா பில்டப்.. பலி ஆடான அமைச்சர் "சோமண்ணா"..! 2 தொகுதிகளிலும் படுதோல்வி..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை தவிடு பொடியாக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று தெரிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. தற்பொழுது வரை காங்கிரஸ் கட்சி 132 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதில் 62 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையே கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலல் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய கட்டுப்பாட்டில் சுமார் 81 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கர்நாடக மாநில பரப்பரையின் பொழுது தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

மேலும் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "கர்நாடக மாநில பாஜக அமைச்சர் சோமண்ணா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு கர்நாடக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரப் போகிறார். கர்நாடகவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு இவர் பெரும் பங்கு வகிப்பார்.

கர்நாடக அரசியல் பிம்பத்தை சோமண்ணா மாற்ற உள்ளார். மோடி கூறியது போல் மிகப் பெரிய சர்ஜிகல் ஸ்டைக் நடத்திய கர்நாடக அரசியலை மாற்ற அவர் உள்ளார். சாம்ராஜ்நகர், வருணா தொகுதிகளில் மாற்றம் நிகழப் போகிறது" என புகழ்ந்து தள்ளி இருந்தார். வருணா தொகுதியில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக களம் இறக்கப்பட்ட சோமண்ணா படுதோல்வியை சந்தித்துள்ளார். 

அதே போன்று சாம்ராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளரும் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளருமான புட்டரங்க செட்டியிடமும் பாஜக அமைச்சர் சோமண்ணா  தோல்வி அடைந்துள்ளார். கர்நாடக மாநில தேர்தலுக்கு முன்பே சோமண்ணா காங்கிரஸில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பாஜக மேலிடம் சோமண்ணாவின் சொந்த தொகுதியை விட்டு வெளி மாவட்டங்களில் இரண்டு தொகுதியை ஒதுக்கியதால் படுதோல்வி அடைந்து பலியாடாகியுள்ளார். அண்ணாமலையால் கர்நாடக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக பில்டப் கொடுக்கப்பட்ட சோமண்ணா படுதோல்வி அடைந்தது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP minister Somanna lost badly in 2 constituencies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->