இந்துக்களுக்கு எதிராக கொச்சையாக பேசிய கோவை பாதிரியார் வீடியோ வைரல் - பாஜக எம்எல்ஏ கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அனைத்து மதத்தினரும் சகோதரத்துவ உணர்வுடன் பழகிவரும் நமது தமிழகத்தில், மதக் கலவரங்களைத் தூண்டும் கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால், கோவையைச் சேர்ந்த பாதிரியார் திரு. பிரின்ஸ் கால்வின், இந்து மதத்தினரை மிகவும் மோசமான வார்த்தைகளால் சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்திருந்த காணொளி வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்துக்களின் மீது மத வெறுப்புணர்வை விதைக்கும் அவரின் கருத்துக்களுக்கு எதிராக பல புகார்கள் அளிக்கப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவரை கைது செய்யாமல் திமுக அரசும், தமிழக காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது.

தனது தவறிற்கு அவர் மன்னிப்பு கேட்டதாகவே இருந்தாலும், ஒருவரின் மத நம்பிக்கைகளைக் காயப்படுத்திவிட்டு, “மன்னிப்பு” என்ற வார்த்தையால் அனைத்தையும் மறக்கடிக்க முடியாது என்பதுதான் உண்மை. 

மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஒரு குற்றவாளி கேட்கும் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றங்களே தவிர, மாநில நிர்வாகம் அல்ல. 

குற்றம் சுமத்தப்பட்டவரைக் கைது செய்து, நீதிமன்றம் முன்பு நிறுத்துவது தான் ஒரு அரசின் தார்மீக கடமை.

எனவே, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பிற மதங்களைப் போலவே இந்துக்களின் மத உணர்வையும் மதித்து, அவர்களைப் பற்றி கொச்சையான கருத்துக்களைப் பேசிய கோவை பாதிரியார் பிரின்ஸ் கால்வினைக் கைது செய்து, அவருக்கு தகுந்த தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்" என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA Condemn to DMK and TN Govt TN Police


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->