திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு! டெல்லிக்கு செல்லும் புகார்! பாஜக எம்எல்ஏ கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


"ஒரு பெண்ணை 5,10 ஆண்கள் திருமணம் செய்கிற பழக்கத்துடன் வாழ்ந்தவர்களே வட இந்தியர்கள். இப்படிப்பட்ட நாகரிகம் கொண்டவர்கள் தமிழர் மீது விமர்சனம் செய்ய முடியாது. தமிழன் தனது பண்பாட்டை விமர்சிப்பவர்களின் நாக்கை அறுப்பான்" என வட இந்திய கலாச்சாரத்தை விமர்சித்த திமுக அமைச்சர் துரைமுருகனின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், "திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன், பெண்களை பற்றி இழிவாக பேசியது அதிர்ச்சியளிக்கிறது. ‘ஐந்து ஆண்கள் ஒரு பெண்ணை மணப்பார்கள்’ என்ற அவரது அருவருப்பான பேச்சு இந்திய கலாச்சாரத்தையே இழிவுபடுத்துகிறது. இது, திமுகவின் பெண்களை அவமதிக்கும் நடைமுறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது."

"இந்தக் கருத்தை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆதரிப்பார்களா? அல்லது அதனை கண்டிக்கத் துணிவார்களா?"

"இண்டியா கூட்டணியில் உள்ள ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, ஹேமந்த் சோரன் ஆகியோர் இது குறித்து கடுமையாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய நேரம் இது. இல்லையென்றால், அவர்கள் பெண்களை அவமதிப்பவர்களாகவே கருதப்படுவார்கள். இந்தக் கருத்துக்காக திமுக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP MLA Vanathi Srinivasan condiment to DMK Congress Rahul


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->