இது "கேடுகெட்ட சந்தர்ப்பவாத அரசியல்".. காங்கிரசை போட்டுத் தாக்கிய பாஜக.!! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என தனியார் செய்தி ஊடத்திற்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த விவகாரம் இந்தியா கூட்டணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள சூழலில் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" : தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி. 

தமிழக தேர்தல் வரை சனாதன எதிர்ப்பை ஆதரித்த காங்கிரஸ் தேர்தல் முடிந்தவுடன் சனாதன தர்மத்திற்கு வால் பிடிப்பது கேடுகெட்ட சந்தர்ப்பவாத அரசியல்" என கடுமையான வார்த்தைகளால் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan criticized Congress politics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->