1000 கோடி! பயந்து, பதட்டமடைந்து, அஞ்சி, திணறி, சிக்கி திணறுகிறதா திமுக?! - நாராயணன் திருப்பதி கிடுக்குப்புடி! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க.,வினரின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை DMK Files என்ற பெயரில் வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.

இது அனைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பினார். 

மேலும், நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் 1000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடவில்லை என்று ஆர்எஸ் பாரதி அந்த நோட்டீஸில் தெரிவித்திருந்தார்.

ஆனால், 1000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் பேட்டி கொடுத்த ஆதாரம், அரசு தரப்பு புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில், "இது ஒன்றே போதும்! அண்ணாமலை அவர்களின் #dmk_files பிரகடனம் தி மு கவை பதட்டமடைய செய்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

சொன்னது நீ தானா? சொல்...சொல்...சொல்...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட #DMKFILES க்கு மறுப்பு தெரிவித்து, அவதூறு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. திமுக. அதன் தமிழாக்க அறிக்கையில், நோபல் ஸ்டீல் என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு எந்த புரிந்துணர்வு  ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளது வியப்பளிக்கிறது.

கடந்த வருடம் (2022) மார்ச் மாதம் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் 1000 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதற்கான ஆதாரம் புகைப்படத்தில் உள்ளது.

அன்று அறிவித்ததை இன்று மறுக்கிறதா திமுக? அல்லது  அண்ணாமலை அவர்களின் அதிரடி ஆட்டத்தில் பயந்து, பதட்டமடைந்து, அஞ்சி, திணறி, சிக்கி திணறுகிறதா திமுக?

##DMKFILES தொடரும்.........." என்று நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், "முன்னுக்குப் பின் முரணான சில கருத்துக்களை, ஆர்.எஸ்.பாரதி தனது தமிழ் சுருக்கத்திலும் ஆங்கில சட்ட அறிக்கையிலும் தெரிவித்துள்ளார்.

ஒன்றில் நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மற்றொன்றில் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்திற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நோபல் புரோமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் என்ற நிறுவனங்களில் பஷீர் முகமது என்பவர் இயக்குனராக இருந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்பு செயலாளர் எதற்காக பதில் அளிக்கிறார்.

திமுக அமைப்புச் செயலாளர்  ஆர் எஸ் பாரதிக்கு ஒரு கூடுதல் தகவலையும் தெரிவிக்க விரும்புகிறோம். இதே நோபல் குழுமத்தின் ஒரு நிறுவனமான நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பஷீர் முஹம்மதுடன் திமுக மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம். அப்துல்லா இயக்குனராக இருந்துள்ளார்.

நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட செய்தியை, நேற்று எனது ட்விட்டர் பக்கத்திலே கேள்வியாக எழுப்பியுளேன்.

நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட், நோபல் புரோமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ், இவை ஒரு குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்கள் என்பதும், திமுகவினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி, யாருடையது என்றும் தமிழக மக்களின் சார்பாக நான் மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்புகிறேன். இந்த முறையாவது பதில் அளிப்பீர்களா?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Que DMK RS Bharathi Notice Annamalai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->