பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்!  - Seithipunal
Seithipunal


கடந்த 2023 ஆம் ஆண்டு டெல்லிக்குச் சென்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட மைத்ரேயன் இன்று, திடீரென எடப்பாடி பழனிச்சாமி மைத்ரேயன் சந்தித்தார்.

இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மைத்ரேயன் தெரிவித்து இருந்தாலும், அவர் அதிமுகவில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், மைத்ரேயன் அதிமுகவில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைமை கலக்கம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அக்கட்சியில் இருந்து விலகி, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (12.9.2024 - வியாழக் கிழமை), நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.

அதனை, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பரிசீலனை செய்து, டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொண்டார்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP National Executive Committee member Maitreyan joined the AIADMK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->