லோக் சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை..!! - Seithipunal
Seithipunal



நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. இத்துடன் ஒடிசா, ஆந்திர பிரதேசம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும்,  கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரையில் தேர்தல் நடைபெற்றது. 

இதில் குஜராத்தில் உள்ள ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று மீதமுள்ள 542 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதன்படி  தற்போது தபால் வாக்குகளில் பாஜக 182 இடங்களை பெற்று முன்னணியில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டது.

அப்படி பாஜக கூட்டணி வென்றால், இது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாக இருக்கும். முன்னதாக 2014 மற்றும் 2019 வருடங்களில் நடைபெற்ற லோக் சபா தேர்தல்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அருணாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஆந்திரபிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP On Peak in Postal Votes in Lok Sabha Election


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->