அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர்..முதுகில் குத்தியா பாக்கிஸ்தான்.! பரூக் அப்துல்லாவுக்கு பாஜக பதிலடி.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானுடன் ஏன் பேசத் தயாராக இல்லை? என தேசிய மாநாட்டு கட்சித்தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பி எழுப்பியுள்ளார். இது குறித்துசெய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் நமது நண்பர்களை மாற்றலாம். ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என வாஜ்பாய் கூறியுள்ளார். அண்டை நாட்டுடன் நட்பாக இருந்தால் இருவரும் முன்னேற முடியும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடர வேண்டியது அவசியம். தற்போது நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் போகிறார். நாங்கள் இந்தியாவுடன் பேசத் தயார் என சொல்கிறார்கள். 

பாகிஸ்தானுடன் பேச நாம் ஏன் தயாராக இல்லை?. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலியப் படைகளால் குண்டு வீசித் தாக்கப்படும் காசாவிற்கு ஏற்பட்ட கதியை இந்தியா சந்திக்க நேரிடும். அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும்" என கருத்து தெரிவித்திருந்தார். இதற்க்கு பாஜக மூத்த தலைவர் ஹினா ஷபி பட் "ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. பரூக் அப்துல்லா இப்போதே கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சி பாகிஸ்தானுக்கு முன்னால் தலைகுனியப் போவதில்லை. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சித்தோம். ஆனால் அவர்கள் மீண்டும் முதுகில் குத்தியுள்ளனர்" என பதிலடி கொடுத்துள்ள.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP response to Farooq Abdullah statement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->