மக்களவைத் தேர்தல் வாகு எண்ணிக்கை : அயோத்தியில் பாஜக பின்னடைவு.!!
BJP Setback in Ayodhya Loksabha Vote Counting
நாடு முழுவதும் நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரசின் இந்தியா கூட்டணியும் நேரடியான போட்டியில் உள்ளன.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 35 இடங்களிலும், காங்கிரசின் இந்தியா கூட்டணி 42 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சி 35 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
மேலும் உத்திரபிரதேச மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக 34 இடங்களிலும், அப்னா தளம் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. மேலும் ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டம், உத்திரபிரதேசத்தின் பைசாபாத் மக்களவைத் தொகுதியில் இருக்கிறது. இந்த தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் லல்லு சிங் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தான் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை மக்களவைத் தேர்தலின் போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்து தேர்தலில் ஜெயித்தது அனைவரும் அறிந்ததே.
English Summary
BJP Setback in Ayodhya Loksabha Vote Counting