அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்திலும் பாஜக தோல்வி! இனியாவது வெறுப்பு அரசியலை நிறுத்திக் கொள்ளுங்கள் - காங்கிரஸ் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் அயோத்தி தொகுதியை தொடர்ந்து, இடைத்தேர்தலில் பத்ரிநாத்திலிருந்து பாஜகவிற்கு மீண்டும் செய்தி வந்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியும் அடங்கும். 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது.

நடைபெற்று முடிந்த 18 வது மக்களவைத் தேர்தலில் பாஜக 1800 கோடி செலவில் ராமர் கோவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் கட்டியது. தேர்தலில் பாஜக அயோத்தி கோவில் உள்ள தொகுதியில் சமாஜ்வாதி கட்சியிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி கோவில் அமைந்துள்ள தொகுதியிலே பாஜக தோல்வியடைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் ராமர் அரசியல் செய்த பாஜகவை இராமரே தோற்கடித்து உள்ளார் என்ற வகையில் விமர்சனங்கள் வைத்தனர்.

தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் அபார வெற்றி பெற்றார். முன்னதாக பத்ரிநாத் தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்தது.

காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர பண்டாரி மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பாஜகவிற்கு தாவினார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.  இந்த நிலையில் பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை குறிப்பிட்டு காங்கிரஸ் தற்பொழுது பாஜகவை விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கமான எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்தில் இருந்து பாஜகவுக்கு மீண்டும் ஒரு செய்தி வந்துள்ளது. இனியாவது உங்களின் வெறுப்பு அரசியலை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp Stop hate politics Congress criticism


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->