திமுகவின் குடும்ப ஆட்சியில் குண்டர்கள் அராஜகம்..!! பாஜகவின் சுதாகர் ரெட்டி விமர்சனம்..!!
BJP Sudakar Reddy criticized DMK govt
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அப்பொழுது பேசிய அவர் "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியை வழங்கியவர் வாஜ்பாய். அவரின் வழியில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா முன்னேறி வருகிறது.
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஒரு குடும்பத்திற்காக நடத்தப்படும் குடும்ப ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சியில் குண்டர்களின் அராஜகம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழக பாஜகவை வலுப்படுத்தும் நோக்கத்தோடு வரும் 27ஆம் தேதி கோவைக்கு தேசிய தலைவர் ஜே.பி நட்டா வரவுள்ளார். அதிமுகவில் என்ன பிரச்சனை இருந்தாலும் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் பாஜகவின் நண்பர்கள். இது வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Sudakar Reddy criticized DMK govt