தமிழக எம்பி-க்கள் ராஜினாமா? கொளுத்திப்போட்ட ராகுல்காந்தி! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே?
BJP Tamilisai Condemn to Congress Rahul And DMK MPs
மக்களவை தேர்தலில் நியாயமற்ற முறையில் பெற்ற வெற்றி என்று ராகுல் காந்தி சொன்ன கருத்துக்கு, பாஜகவின் தமிழிசை சவுந்தராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "திராவிட மாடலின் 40-க்கு 40 வெற்றி ரகசியத்தை அமெரிக்காவில் வெளியிட்ட ராகுல்காந்தி அவர்களே நீங்கள் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதும் இப்படி தானா?
இக்கருத்தை நீங்கள் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கூறவில்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூட இந்த கருத்தை தெரிவிக்கவில்லை.
90 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டு ஏதோ மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றது போல தோல்வியைக் கூட வெற்றியைப்போல் கொண்டாடினீர்கள்.
அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று நீங்கள் இந்திய ஜனநாயகத்தையும்,இந்திய தேர்தல் ஆணையத்தையும் ஒட்டுமொத்த இந்திய தேசத்தை அவமானப்படுத்துகிறீர்கள்.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தமிழக அரசு அதிகாரிகள் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் தானே நடைபெற்றது.நியாயமற்ற முறையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது என்றால் அதற்கு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
அப்படி பார்த்தால் தமிழகத்தில் 40-க்கு 40 இடங்கள் வெற்றி பெற்றதை நியாயமற்ற முறையில் பெற்ற வெற்றி என்று உங்கள் கூட்டணி கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அமெரிக்காவில் கூறுகிறார்களா?
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே உங்கள் கூட்டணி தலைவரே குற்றம் சாட்டுவதால் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?
40-க்கு 40 வெற்றி பெற்ற கூட்டணி கட்சி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே உங்கள் கூட்டணி தலைவரே குற்றம் சாட்டுவதால் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Tamilisai Condemn to Congress Rahul And DMK MPs