"மதுபானங்களை டோர் டெலிவரி செய்யலாம்".. தமிழக அரசை சாடிய வானதி சீனிவாசன்..!!
Bjp Vanathi slams Liquor can be delivered at door
கோயம்புத்தூர் மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பூங்காவை சீர்படுத்தி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி துவங்குவதற்கான பூஜை இன்று நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்த பூஜையின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "அங்கன்வாடி மையங்கள் பூங்காக்களுக்கு முன்னுரிமை வழங்கி அதிக அளவில் தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்படுகிறது.
தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மதுபான சட்ட திருத்தம் எங்கு சென்று முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு பக்கம் மது கடைகளை படிப்படியாக குறைப்பதாக தமிழக அரசு கூறிவிட்டு திருமண மண்டபங்கள் வீடுகள் விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது அருந்திக் கொள்ளலாம் என வழங்கியுள்ளது.
இது தமிழக அரசே மது குடிப்பதை ஊக்குவிப்பது போல் உள்ளது. இதற்கு பதிலாக டோர் டெலிவரி செய்யலாம். இது மக்களை ஏமாற்றும் விஷயம், ஒரு சமூக சீரழிவை ஏற்படுத்தும்.
தமிழக அரசு மக்களை சீரழிவை நோக்கி இழுத்துச் செல்ல முயற்சி செய்கிறது. இந்த சட்ட திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் இதை அனுமதிக்க மாட்டோம். மது கொள்கையில் தமிழக அரசு நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்கிறது" என தமிழக அரசை சாதியுள்ளார்.
English Summary
Bjp Vanathi slams Liquor can be delivered at door