ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போகிறோம் - மர்மநபர் மிரட்டல்!
bomb Thread In RSS Building
நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைமையகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக, தொலைப்பேசி மூலம் மர்மநபர் மிரட்டல் விடுததால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பில், "மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போகிறோம்" என்று மிரட்டிய மர்மநபர் அழைப்பை துண்டித்துள்ளார்.
இந்த மிரட்டலை அடுத்து போலீசாரின் மோப்ப நாய் படை, வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்க வைக்கும் படை ஆகியவை வரவழைக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ் வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய எந்த பொருளும் கண்டறியப்படவில்லை என தெரியவந்ததால், வந்த அழைப்பு மிரட்டல் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்த எண்ணை வைத்து மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
அதேசமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்.எஸ்.எஸ் வழக்கம் அமைந்துள்ள பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
bomb Thread In RSS Building